×

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தி அறிவிப்பு.. ஒரு தாளுக்கான கட்டணம் ரூ.225 ஆக அதிகரிப்பு: மாணவர்கள் ஷாக்

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய தேர்வு கட்டணங்கள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டண உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி,

*இளங்கலை செய்முறை ,எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு.. ஒவ்வொரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

*இளங்கலை ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்த நிலையில்,. தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

*முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

*முதுகலை ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

*இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

*முதுகலை படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் கட்டணமும் 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் மற்றும் சான்றிதழுக்கான கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தி அறிவிப்பு.. ஒரு தாளுக்கான கட்டணம் ரூ.225 ஆக அதிகரிப்பு: மாணவர்கள் ஷாக் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....